அர்ஜுன் தார்பாலின்கள் மிக சரியான மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்டு சூரிய வெப்பத்தை தாங்க கூடிய அளவிற்கு அதிக அளவில் UV ஸ்டெபிலைசர் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுவதால் இவை சூரிய வெப்பத்தினால் பாதிப்புக்கு உள்ளாகாமல் நீண்ட நாள் உழைக்கும். இதில் 150 GSM (GSF 13.94 கிராம்) தார்ப்பாலின் போடலாம். 200 GSM ( GSF 18.58 கிராம்) ) மிக அதிகமாக போடப்படுகிறது. மிகவும் நீண்ட நாட்கள் வருடங்கள் உழைக்க வேண்டும் என்றால் 262 GSM (GSF 24.34 கிராம் ) போடலாம்.
GSM/GSF – ல், எப்பொழுதுமே 7% எடை கூடுதலாகவோ , குறைவாகவோதான் இருக்கும்.
பொதுவாகவே கருப்பு நிறம் கொண்ட தார்பாய்கள் மற்ற நிறங்களில் உள்ள தார்ப்பாய்களை விட சில மாதங்கள் கூடவே உழைக்கிறது . எனவே தங்களது பட்ஜெட்க்கு ஏற்றவாறு தார்பாலின்களை தேர்வு செய்து கொள்ளவும். அதிக ஜிஎஸ்எம் உள்ள தார்பாய்கள் அதிக வருடங்கள் உழைக்கும்.
இந்த ஏற்பாடுகள் தார்ப்பாலின். நீண்ட நாட்கள் உழைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
GSM என்றால் Grams Per Square Metre. ஒரு சதுர மீட்டருடைய எடை.
GSF என்றால் ஒரு சதுர அடி எடை.
நாங்கள் மட்டும் தான் சதுர அடி எடையையும் மக்களுக்கு கொடுக்கிறோம். சில கம்பெனிகள் Microns என்று விற்பனை செய்கிறார்கள். அதை நம்மால் Cross செக்கிங் செய்ய/ சரி பார்க்க முடியாது. எங்களது பொருட்களை சரியான GSM / GSF உள்ளதா என்பதை, இரண்டு மூன்று வருடங்கள் கழித்தும் கூட நீங்கள் எடை போட்டு சரி பார்த்துக் கொள்ளலாம்.
தார்ப்பாலின்கள் நீங்களாகவே விரித்துக் கொள்ள வேண்டும்.