பண்ணை குட்டைகள் அளக்கும் போது கட்டாயம் பெரிய டேப் எடுத்துக்கொண்டு தரை மேல் டேப்பை பதித்து தான் அளக்க வேண்டும் . தரைக்கு மேல் இரண்டு புறமும் குறைந்த அளவு 3 அடி இருக்குமாறு வைத்து தான் அளக்க வேண்டும். A +,B + C +.D + E அனைத்தையும் கூட்டினால் வருவதுதான் கிழக்கு மேற்கு அளவு. இதேபோல் J+K+L+M+N கூட்டினால் வருவது வடக்கு தெற்கு பக்க அளவு.
பண்ணைக்குட்டைக்காண தார்ப்பாலின்வாங்கும் பொழுது இந்த மொத்த அளவில் நீளம் மற்றும் அகலம் மட்டும்தான் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் அளவில் இருந்து நீங்கள் வாங்கும் தார்ப்பாலின் அளவு கொஞ்சம் குறையும். நாங்கள் 9 அடி கொண்ட தார்ப்பாலின் ரோல், அதை ஒவ்வொன்றாக ஒட்டும் பொழுது அந்த ஜாயிண்ட் ரெண்டு இன்ச் எடுத்துக் கொள்ளும். அது மட்டுமல்லாமல் ஓரத்தில் மடித்து கயிறு வைத்து வலை போடும் பொழுது ஒரு சைடுக்கு 2 inch குறையும். ஆகவே நீளத்தில் எப்பொழுதும் 30 அடிக்கு உள்ளான நீளத்தில் அரை அடியும், 50 அடிக்கு மேல் உள்ள தார்ப்பாயில் நீளத்தில் ஒரு அடி குறையும். நூறு அடி நீளத்தில் இரண்டு அடி குறையும். 150 அடிக்கு தார்ப்பாய் வாங்கினால் அதில் நீளத்தில் மூன்று அடி குறையும். ஆகவே அதற்கு ஏற்றவாறு சொல்லி ஆர்டர் செய்யவும்.
அகலத்தின் ஒவ்வொரு 9 அடிக்கும் இரண்டு இன்ச் ஜாயிண்ட்/ இணைப்பு உள்ளதால் ஒவ்வொரு 9 அடிக்கும் 2 இன்ச் குறையும் மற்றும் இடது பக்கம் வலது பக்கம் உள்ள இணைப்பு ஹெம்மிங் அதில் ஒரு நாலு இன்ச் குறையும். ஆகவே நீங்கள் ஆர்டர் செய்யும் பொழுது இறுதி அளவு உங்களுக்கு எவ்வளவு கட்டாயம் வேண்டும் என்று தெளிவாக கூறும்படி கேட்டுக் கொள்கிறோம்.
அதற்கு பிறகு நீளத்தில் கொஞ்சம் அகலத்தில் கொஞ்சம் சைஸ் பெரிதாக புக் பண்ணினால் மட்டும்தான் உங்களுக்கு உங்களுக்கு தேவையான இறுதி அளவு கிடைக்கும். இது அனைத்து தார்ப்பாலின்களுக்கும் பொருந்தும் .
பண்ணை குட்டைக்காண, குழியை பறிக்காமல், தார்ப்பாலின்கள் வாங்க வேண்டாம். தார்ப்பாலின்கள் வாங்கிய பண்ணைக்குட்டை மேல் விரித்த பிறகு, அளவுகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், மீண்டும், அதை மாற்றம் செய்வது மிகவும் கடினம். எனவே ஒரு முறைக்கு, இரண்டு முறை நன்றாக சரியாக அளந்து பார்த்து பண்ணை குட்டை தார்ப்பாலின்கள் ஆர்டர் செய்யவும்.