1. குட்டை தோண்டி முடித்த பொழுது, ஏற்கனவே கூறியபடி நான்கு புறமும் சரிவாக உள்ளவாறு அமைப்பது மிகவும் நல்லது. மண் சரியாமல் இருக்கும்.

2. முடிந்து வரை தேங்காய் நார், எம் சேண்டு போன்றவற்றை போட்டு தரையை கூரான கற்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் தண்ணீர் விட்டு நன்றாக திம்ஸ் கட்டை போட்டு மெத்தி விடவும் .
இல்லை என்றால் பழைய விளம்பரம் பிளக்ஸ் தார்ப்பாய்கள் போன்றவற்றை விரித்துக் கொள்ளலாம். (இவை மார்க்கெட்டில் இரண்டு ரூபாய் ஒரு சதுர அடிக்கு கிடைக்கிறது ).

முதலில் கரைக்கு மேல் வைத்து நீல அகலம் சரியாக செக் செய்து பிறகு அப்படியே இறக்கிவிடலாம்.

பண்ணைக்குட்டை தார்பாலின்களுக்கு வளையம் தேவையில்லை .

முடிந்தவரை, குச்சி கொண்டு வளையத்தில் மேலே கட்ட வேண்டாம்.

வெளியே உள்ள முனைகளை சிறிதளவு நான்கு முதல் ஆறு இன்ச் குழி பறித்து அதில் முனைகளை பதித்து , காற்று உள்பக்கம் போகாதவாறு மற்றும் காற்றில் பறக்காதவாறு, அமைக்க வேண்டும்.

மிக முக்கியமாக தரை மேல் இருக்கும் தார்பாய்களை பண்ணை குட்டை முழுமையாக தண்ணீர் நிரம்பும் வரைக்கும் மண்ணுக்கடியில் தார்பாய்களை பதிக்கவே கூடாது.

பண்ணை குட்டை வெட்டும் பொழுது சைடுல அங்கங்கே குழிகள் இருக்கும். தண்ணீர் நிரம்பும் போது அது குழிகளுக்கு உள்ளே போய் தார்ப்பாய்கள் வெளிவருவதால் தண்ணீர் நிரம்ப நிரம்ப மேலே உள்ள தார்ப்பாயை கீழே இழுக்கும். அதனால் நீண்ட நாள் கழித்து தார்பாலின்கள் நீளவாக்கில் கிழிவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே மேலே உள்ள எக்ஸ்ட்ரா தார்பாய்களை கொஞ்சம் லூசாக வைத்து பிறகு மண்ணில் பதித்துக் கொள்ளவும் .

shade Net, நிழல் வலை போன்றவற்றை உபயோகப்படுத்தி தரை மேல் இருக்கும் தார்பாய்களை பாதுகாத்துக் கொண்டால் இன்னும் நீண்ட வருடங்கள் உழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்தியாவில் மற்றும் தமிழ்நாட்டிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெப்பத்தின் அளவு மாறுபடுகிறது. திருச்சி , வேலூர், சென்னை போன்ற ஊர்களில் அதிக அளவு வெப்பம் உள்ளது.

அதேபோல் கோத்தகிரி , ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஊர்களில் வெப்பநிலை குறைவாக உள்ளது. அது மட்டுமல்லாமல் பண்ணைக்குட்டை தோண்டும் பொழுது சரளை மண், களிமண், பாறைகளும் அதிகமாக உள்ளது. பாறைகள் அதிகமாக உள்ள இடத்தில் பண்ணை குட்டைகள் போட்டால் அது காயப்பட வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமல்லாமல் மாடுகள் மேலே நடக்கிறது. சில இடங்களில் நாய்கள் கடிக்கிறது. சில இடங்களில் கோரைகீழிருந்து முளைக்கிறது. இது போன்ற விஷயங்கள் இருப்பதால் பண்ணை குட்டை தார்ப்பாலின்களுக்கு நாங்கள் எந்த விதமான உத்தரவாதமும் தருவதில்லை. ஆனால் இவைகள் 3 முதல் 9 வருடம் வரை நன்றாக உழைக்கின்றன. அவர் அவர்கள் அதிக கவனம் செலுத்தி பராமரித்து வந்தால் நீண்ட வருடங்கள் உழைக்கும்.
( பண்ணை குட்டை மேல்புறம் முழுவதும் நிழல் வலை போட்டால் பாசம் பிடிக்காது).

இதைத் தவிர உங்களுக்கு மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும் !

Phone: 94422 12345, 94861 12345.

நன்றி வணக்கம்!