உதாரணமாக 21 அடி நீளம் 21 அடி அகலம் 6 அடி உயரம் உள்ள பண்ணை குட்டையின் கொள்ளளவு 74 , 926 லிட்டர் ( (எழுபத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி ஆறு லிட்டர்)ஆகும். 45 அடி நீளம் x 45 அடி அகலம் x 9 அடி உயரம் உள்ள பண்ணை குட்டையின் கொள்ளளவு 5,16,075 லிட்டர்.( ஐந்து லட்சத்து பதிணாராயிரத்து எழுபத்து ஐந்து லிட்டர். ஆகும். ஆகவே மிகச் சுலபமாக பண்ணை குட்டையின் கொள்ளளவு தெரிந்து கொள்வதற்கு அதன் நீளம் பெருக்கல் அகலம் பெருக்கல் உயரம், கணக்கிடும்பொழுது வருவது மொத்த கன அடி. ஒரு கன அடிக்கு 28.31 லிட்டர் தண்ணீர் கொள்ளும். எனவே அதற்கு ஏற்றவாறு நீங்கள் கணக்கிட்டு உங்கள் கொள்ளளவை முடிவு செய்து கொள்ளவும்.

வட்டமான பண்ணை குட்டைகளுக்கு 22/7 X ஆரம் x ஆரம் X உயரம் , என்ற என்ற சூத்திரத்தில் கணக்கு போட்டு வரும் மொத்த கன அடியில் 28.31 மூலம் பெருக்கினால் வருவது கொள்ளளவு லிட்டர்.