1. தமிழகத்தில் மிக அதிக இடங்களில் விவசாய பூமிகளில் (Water Table) பூமிக்கு அடியில் உள்ள தண்ணீர் மட்டம் குறைந்து கொண்டே செல்வதால், எந்த கிணற்றிலும் இப்பொழுது தண்ணீர் இல்லை.
2. இந்த சூழ்நிலையில் அனைத்து விவசாயிகளும் போர் போட்டு அதன் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் நிலையில் உள்ளனர்.
3. போர் மோட்டாரில் இருந்து/ கம்ப்ரஸரில் இருந்து வெளியேறும் தண்ணீர் மிகவும் குறைவாக இருப்பதால் அதை நேரடியாக விவசாயத்திற்கு பாய்ச்ச இயலாது.
4. எனவே விவசாயிகள் போர் மோட்டார் மற்றும் கம்பரசர் இல் இருந்து வெளியேறும் தண்ணீரை வறண்ட கிணற்றிலேயே விட்டு, பிறகு அதிலிருந்து பம்ப்செட் மோட்டாரில் தண்ணீர் எடுத்து வாய்க்கால் மூலமாகவோ அல்லது சொட்டு நீர் பாசனம் மூலமாகவோ, தென்னை மரங்களுக்கும், பயிர்களுக்கும் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
5. ஆனால், 8 மணி நேரம் போர் மோட்டர் ஓடினால் அதன் மூலம் சுமார் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் கிணற்றுக்குள் விடப்பட்டால், சுமார் எட்டு அல்லது பத்து மணி நேரம் கழித்து, பார்த்தால் அதில் சுமார் 40 ஆயிரம் மீட்டர் லிட்டர் மட்டுமே தண்ணீர் தேங்கி இருக்கும்.
6. இதற்காகத்தான், தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு, கிணற்றின் அருகில் தரை மேல் பண்ணை குட்டை அமைக்கலாம்.
7. அர்ஜுன் தார்பாலின் பிளாஸ்டிக் தார்ப்பாலின் பண்ணை குட்டை, இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் தார்ப்பாலின் ஆகும்.
8. பண்ணை குட்டை அமைப்பது மிகவும் எளிதானது. பொக்லைன் இயந்திரத்தின் மூலம் நீங்கள் செவ்வகமாக பறிக்கலாம்.
9. அல்லது தரை மேல் பண்ணை குட்டை அமைக்க வேண்டும் என்றால் நமது தோட்டத்தில் உள்ள மண்ணோ அல்லது வெளியில் வாங்கிய மண் கொண்டு நான்கு புறமும் தலைக்கு மேல் 6 முதல் 8 அடி வரை மண்ணை கொட்டி, அதற்கு மேல் தண்ணீரை சேமிக்கலாம்.