பொதுவாகவே, பெட்ரோலியம் கம்பெனிகளில், குரூட் ஆயில் லிருந்து, பெட்ரோல், டீசல் தனியாக பிரிக்கும் பொழுது, மீதம் மிஞ்சும் பொருட்களே
HDPE, மற்றும் LLDPE போன்ற மூலப்பொருட்கள். இவைதான் முதல் தரம். இதேபோன்று பால் கம்பெனிகள் பால் பைகள் செய்து பால் விநியோகம் செய்கின்றன. உபயோகப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகள், ரோடில் வீசப்படுகின்றன. அவைகளை பொறுக்கி எடுத்து அதன் மூலமும் பிளாஸ்டிக் தார்ப்பாலின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பழைய பால் பை ஒரிஜினல் மூலப்பொருளை விட எட்டில் ஒரு பங்கு விலையிலேயே கிடைக்கிறது. ஆகவே இது போன்ற ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட பழைய பிளாஸ்டிக் கேரி பேக், பழைய பால் பை போன்றவற்றை மூலப்பொருளாகக் கொண்டு தார்பாலின்கள் செய்தால் அவை விலை கம்மியாக கிடைக்கும். மேற்கொண்டு சூரிய வெப்பத்தில் தாங்க கூடிய அளவிற்கு UV Stabilizer என்ற கெமிக்கல் சேர்க்கப்பட வேண்டும். இது மிகவும் விலை உயர்ந்த மூலப் பொருளாகும். இதை சேர்த்தால் மட்டுமேn பண்ணைக் குட்டைகள் நீண்ட வருடங்கள் சூரிய வெப்பத்தை தாங்கிக் கொண்டு நன்றாக உழைக்கும். இது போன்ற Re Cycled, கலப்படம் செய்யப்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பண்ணைக் குட்டைகள், விலை குறைவாக கிடைக்கும். ஆனால் அவை ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்குள் சாயம் வெளுத்து கொட்டி போய்விடும்.
நாங்கள் கலப்படம் இல்லாத மூலப்பொருட்கள் உபயோகப்படுத்துவதாலும், சூரிய வெப்பத்தை தாங்கக்கூடிய அளவிற்கு மிக மிக அதிக அளவில் UV Stabiizer, சேர்க்கப்பட்டு தயாரிப்பதாலும் எங்களுடைய பண்ணைக் குட்டைகள் மார்க்கெட்டில் கிடைக்கும் பண்ணைக் குட்டைகளை விட மூன்று முதல் நான்கு நான்கு மடங்கு வருடங்கள் கூட உழைக்கும். எனவே, ஒரு பொருள் விலை குறைவாக இருக்கிறது என்று என்று விலையை மட்டும் பார்த்து வாங்கினால், அவை நீண்ட காலம் உழைக்காது. நாங்கள் இதுவரை ஒன்றரை லட்சத்துக்கு மேல் பண்ணைக் குட்டைகள் தென்னிந்தியாவில் கொடுத்து இருக்கிறோம்.
மேலும் நாங்கள் உலகத்தரம் வாய்ந்த பண்ணை குட்டை தார்ப்பாலின்களை, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து, எங்கள் சொந்த பாக்டரியில், கஷ்டமர்கள் கண்ணெதிரே, உற்பத்தி செய்து அவர்களுக்கு கொடுத்து வருகிறோம். எனவே வாடிக்கையாளர்கள், பண்ணை குட்டைகள் வாங்கும் பொழுது விலையை மட்டும் பார்த்து, கம்பெனியின் வயது, அவர்களின் உண்மைத் தன்மை, நேர்மை தன்மை, கம்பெனியின் தர கொள்கைகள், அவர்கள் கடைக்காரர்களா? அல்லது உற்பத்தியாளர்களா? என்று பரிசோதித்து பிறகு பொருட்களை வாங்கவும்.
எங்களது பேட்டரியில் உங்கள் கண் முன்னாடியே, தார்ப்பாலின்கள் உற்பத்தி செய்யும்போது. நீங்களும் தரத்தை சரிபார்த்து, பிறகு வாங்கிக் கொள்ளலாம்.